சசிகலாவை கண்டு ஓபிஎஸ், இபிஎஸ் பயந்து ஓடுவதாக அதிமுக முன்னாள் நிர்வாகி புகழேந்தி விமர்சித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் நிர்வாகி புகழேந்தி, சசிகலா செல்கின்ற இடத்தில் எல்லாம் தானாகவே ஒரு கூட்டம் வருகிறது. அதை நான் மறுக்க முடியாது. நான் பணம் கொடுத்து கூடுகின்ற கூட்டம் இல்லை, தானாகவே ஒரு கூட்டம் வருகிறது. அவர்களும் இவர்களே… அவர்களே என்று அழைக்காமல் நேரடியாகவே சம்பவ இடத்திற்கு சென்று பார்க்கிறார்கள், அதனுடைய எழுச்சி எப்படி இருக்கிறது என்று சொல்லி, அதை உணர்கிறார்கள்.
ஆகவே அவர்கள் களத்திற்கு வர வர அது அதிரலைகளாக இருக்கும். அதற்கு பயந்துதான் இவர்கள் இப்படி இருக்கிறார்கள். இப்போ எடப்பாடி பழனிசாமியும், ஓபிஎஸ் அவர்களும் ரோட்டில் இறங்கி வேகவேகமாக இறங்கி ஆய்வு செய்கிறார்கள் என்று பார்த்தால் அது திருமதி சசிகலா அவர்கள் எங்க வந்து விடுவார்களோ என்று பயந்துட்டு தான் ஓடி வாரங்க. அவங்க மக்களுக்காக வரவில்லை, சசிகலா எங்கே வந்து விடுவார்களோ என்ற பயத்தில் தான் ஓடி வந்து அங்கு நின்ற ஒரு சூழ்நிலையை பார்க்க முடிகிறது என விமர்சித்தார்.