சேலத்தைச் சேர்ந்த முன்னாள் அதிமுக நிர்வாகியான கருணாகரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “கடந்த 2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது வீரபாண்டி தொகுதியில் போட்டியிடுவதற்கு சீட் வாங்கி தருவதாக கூறி இளவரசியின் மருமகனான ராஜராஜன் தன்னிடம் ரூபாய் 5 கோடி வரை பணம் பெற்றதாகவும், ஆனால் சொன்னபடி சீட் வாங்கித் தரவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து சீட் வாங்கி தராததால் கருணாகரன் தன்னுடைய பணத்தை திரும்ப கேட்டதாகவும், ஆனால் அதற்கு இளவரசியின் மருமகனான ராஜராஜன் மறுப்பு தெரிவித்து விட்டதாகவும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பணம் கொடுத்ததற்கான எந்த ஆதாரமும் முறையாக இல்லை எனக்கூறி ராஜராஜன் மீதான மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.