மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா வீட்டில் கடந்த 2017 ஆம் ஆண்டு வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது பணமதிப்பு இழப்பு செய்யப்பட்ட காலத்தில் 1600 கோடிக்கு பினாமிகளின் பெயரில் பல்வேறு சொத்துக்களை வாங்கியதற்கான ஆவணங்கள் சிக்கியது. அதனடிப்படையில் சசிகலாவின் பினாமிகள் என்று பலரது சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்பட்டன. இதனை எதிர்த்து நவீன் பாலாஜி உட்பட 14 பேர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை தனி நீதிபதி தள்ளுபடி செய்தார். இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன்,சத்ய நாராயண பிரசாத் ஆகியோர் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.
Categories