சசிகலாவின் முதலைக்கண்ணீர் நாடகம் எடுபடவில்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.
ஒருங்கிணைப்பாளர்- இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலில் வெற்றிபெற்ற ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் எம்ஜிஆர் ஜெயலலிதா நினைவிடங்களில் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக தேர்தலில் குழப்பங்களை ஏற்படுத்தலாம் என காத்திருந்த எதிரிகளுக்கு, இடம் கொடுக்காத வகையில் தேர்தல் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளதாகவும், குழப்பத்தை ஏற்படுத்த முதலை கண்ணீர் வடித்து நாடகமாடிய சசிகலாவின் எண்ணம் ஈடேறவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.