Categories
தேசிய செய்திகள்

சசிகலாவின் சொத்துக்கள் முடக்கம்…. வருமான வரித்துறையினர் அதிரடி..!!

சசிகலாவின் கோடிக்கணக்கான சொத்துக்களை பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் வருமான வரித்துறை முடக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 வருமானத்திற்கு அதிகமாக ரூ.66கோடியே 64 லட்சத்திற்கு சொத்து  சேர்த்ததாக  மறைந்த  முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா,  சசிகலா மற்றும் அவரது   உறவினர்கள் இளவரசி சுதாகரன் ஆகியோர் மீது பெங்களூரு தனி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.  அந்த வழக்கில் அவர்கள் 4 பேருக்கும் 4 ஆண்டுகள்  சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டது.  இந்த வழக்கில் மேற்கண்ட தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு கர்நாடக ஐகோர்ட்டில் நடைபெற்று  தனிக்கோர்ட்டு தீர்ப்பை ரத்து செய்ததோடு மட்டுமல்லாமல் நால்வரையும் விடுதலை செய்தது.

Income Tax department sends 48,000 notices under faceless e-assessment plan- The New Indian Express

 இந்த விடுதலையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ததை தொடர்ந்து சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அவர்களை விசாரித்தனர். கடந்த 2017ஆம் ஆண்டு சசிகலா மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான 180 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது இந்த சோதனையில் ரூபாய் 1600 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் வருமான வரித் துறையால் முடக்கம் செய்யப்பட்டன. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லம் எதிரேயிருந்த 10 கிரவுண்ட் இடம் சசிகலாவுக்கு சொந்தம் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில் இதன் மதிப்பு ரூ.300 கோடி இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் சென்னை போயஸ் கார்டனில் உள்ள சசிகலாவின் சொத்துக்களை வருமானவரித்துறை பினாமி சட்டத்தின் கீழ் முடக்கி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Categories

Tech |