தமிழகத்தில் சசிகலாவின் விடுதலை கட்சியிலும் அரசியலிலும் எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பது, “உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி நாடு முழுவதிலும் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதுதான் அதிமுகவின் முக்கிய நிலைப்பாடு. இருந்தாலும் நீட் தேர்வால் அரசு பள்ளி மாணவர்கள் அதிக அளவு பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு அவர்களின் நலனுக்காக 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கிறது. கடந்த வருடம் பன்னிரண்டாம் வகுப்பு படித்த மாணவர்களில் 41 சதவீதம் பேர் அரசுப் பள்ளி மாணவர்கள்.
அதில் 6 பேருக்கு மட்டுமே மருத்துவ படிப்பில் இடம் கிடைத்துள்ளது. தற்போது வழங்கப்பட்டுள்ள 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் மூலமாக 313 மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் சேர இடம் கிடைத்துள்ளது. மேலும் சசிகலாவின் விடுதலை அரசியலிலும், கட்சியிலும் எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தாது” என்று அவர் கூறியுள்ளார்.