Categories
அரசியல் மாநில செய்திகள்

சசிகலாவுக்காக இல்லை…! தடை போட இதான் காரணம்…. உண்மையை உடைத்த அமைச்சர் …!!

சசிகலா 8ஆம் தேதி தமிழகம் வர இருக்கும் ஜெயலலிதா நினைவகம் அடைக்கப்பட்டதாகவும், அங்கு யாருக்கும் செல்ல அனுமதி இல்லை என தமிழக அரசு உத்தரவிட்டு, சசிகலாவின் வருகையை தடுக்க திட்டமிட்டுள்ளதாக தமிழக அரசின் மீது முன்வைக்கப்பட்ட குற்றசாட்டுகளுக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், மறைந்து இன்றும் எல்லோருடைய நெஞ்சங்களில் வாழ்ந்து கொண்டு இருப்பவர்கள் மறைந்த புரட்சி தலைவி அம்மா அவர்கள். அம்மாவுக்கு நினைவிடம் அமைக்க வேண்டும் என்பது தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களின் எண்ணம். இந்த கோரிக்கையை அரசு நிறைவேற்றியுள்ளது.

இதனால் எம்ஜிஆர் நினைவிடமும் புதுப்பிக்கப்படும் பணிகள் எல்லாம் நடைபெற்றது. முதல் கட்ட பணிகள் முடிந்த பிறகு முதல்வர், துணை முதல்வர் திறந்து வைத்தார்கள். இரண்டாம் கட்ட பணிகளில் அருங்காட்சியகம் தயாராகிறது. அம்மா அவர்கள் வாழும் காலங்களில், அவர்கள் தமிழகத்துக்கு ஆற்றிய பணிகள், கொண்டு வந்த திட்டங்கள். தமிழ்நாட்டை முன்னேற்ற பாதையில் அழைத்து சென்றது. சமூக நீதி காத்த வீராங்கனையாக, பல்வேறு வகையில் போராடி தமிழர்களின் உரிமையை  நிலைநாட்டியது.

புரட்சித்தலைவி அம்மாவை பொறுத்த வரை  பன்முக தன்மை கொண்டவர். 8 மொழிகளுக்கு மேல் தெரியும். கலை, அரசியல் என எல்லா துறைகளிலும் முத்திரை பதித்துள்ளார். சிறந்த அளவிற்கு நிர்வாகத்திறமை. அப்படிப்பட்ட ஒரு ஆற்றல் மிகுந்த… முதல்வராக இருந்து தமிழ்நாட்டை வழிநடத்தி…  முன்னேற்ற பாதையில் அழைத்துச் சென்றவர். அவர்களுடைய நினைவுகளை வருங்காலத்தில் உள்ள  தலைமுறைகள் எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும். எனவே இன்றுள்ள டிஜிட்டல் டெக்னாலஜியை பயன்படுத்தி,  அதன் மூலமாக மாணவர்கள்,   மாணவியர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

பெண்கள் சமுதாயத்திற்கு அம்மா ரோல் மாடல். அவர்களைப் போல அணைத்து பெண்களும் தைரியம், தன்னம்பிக்கை, எந்த ஒரு சூழ்நிலையும் மனம் கலங்காத ஒரு சூழ்நிலை… அப்படிப்பட்ட தன்னம்பிக்கை, தைரியம் இருக்கின்ற பெண்கள் உருவாக வேண்டும். அதை எல்லாம் நம்முடைய சமுதாயத்திற்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது.

அம்மாவை பற்றி அடுத்த ஜெனரேஷன் எல்லாத்துக்கும் கொண்டு கொண்டு போக வேண்டும். அதற்காக பெரிய அளவிற்கு டிஜிட்டல் வேலையெல்லாம் நடைபெறுகிறது. இந்த நேரங்களில் பொது மக்கள் எல்லாம் போயிட்டு போயிட்டு வந்தால் இடையூறுகள் வர வாய்ப்புகள் உண்டு. அதற்காகத்தான் இப்போதைய   தடைகள் விதிக்கப்பட்டுள்ளது என விளக்கம் அளித்தார்.

Categories

Tech |