சசிகலா தலைமையில் பேரணி நடத்த அனுமதி வழங்க கோரி முன்னாள் அமைச்சர் செந்தமிழன் அளித்திருந்த மனுவை சென்னை மாநகர காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் நிராகரித்தார்.
சொத்துக் குவிப்பு சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்த நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா நாளை மறுநாள் சென்னை வர உள்ளார். இந்த நிலையில் சசிகலா தலைமையில் பேரணி நடத்த அனுமதி கோரி முன்னாள் அமைச்சர் செந்தமிழன் மாநகராட்சி காவல்துறை ஆணையரிடம் மனு அளித்திருந்தார்.
சசிகலாவுக்கு 12 இடங்களில் வரவேற்பு அளிக்கவும் அனுமதி கோரியும் மனு அளிக்கப்பட்டது. சட்டம் ஒழுங்கு பிரச்சனை குறித்த கலந்தாய்வுக்கு பிறகு அனுமதி குறித்து அறிவிக்கப்படும் என பெருநகர சென்னை மாநகராட்சி அறிவித்திருந்த நிலையில் மனுவை நிராகரித்து உள்ளதாக தெரிவித்துள்ளார்.