Categories
அரசியல்

சசிகலாவுக்கு உரிமை இருக்கு…. யாரும் தடுக்க முடியாது…. தொல்.திருமாவளவன் பேச்சு…!!!

திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் திமுக வெற்றியை கைப்பற்றி உள்ளது. ஆனால் அதிமுக படுதோல்வி அடைந்துள்ளது. இதனை அடுத்து திமுகவின் வெற்றி குறித்து இபிஎஸ்- ஓபிஎஸ் தேர்தல் ஆணையத்தை திமுக தங்களுடைய கைப்பாவையாக மாற்றி விட்டதாக குற்றம் சாட்டி வருகின்றனர். இவ்வாறு அவர்களின் அறிக்கையை பார்க்கும் பொழுது கடந்த காலங்களில் அதிமுக அப்படிதான் வெற்றி பெற்றதா? என்று கேள்வி எழுப்புகிறது.

அதிமுகவில் சரியான தலைமை கிடையாது. அதிமுக பாஜகவை சார்ந்து இயங்கும் வரையிலும் தோல்விதான் ஏற்படும். அரசியலிலிருந்து ஒதுங்கி விட்டேன் என கூறி விட்டு மீண்டும் சசிகலா அரசியலுக்கு வந்தால் அதை நாம் விமர்சனம் செய்ய முடியாது. அவர் விரும்பும் நேரத்தில் அரசியலுக்கு வருவதை நாம் நிராகரிக்க முடியாது. ஜெயலலிதாவின் சமாதிக்கு சசிகலா செல்ல அனுமதி கேட்டுள்ளார். அங்கே செல்ல அவருக்கு உரிமை இருக்கிறது. அவரை யாரும் தடுக்க முடியாது. எனவே அவருக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |