Categories
மாநில செய்திகள்

சசிகலாவுக்கு கொரோனா…. தீவிர பாதிப்பு – பரபரப்பு…!!

சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால் விடுதலையாகும் தேதி தள்ளிப்போகும் என்று தெரிவிக்க்கப்பட்டுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை வாசம் அனுபவித்து வரும் சசிகலா தண்டனை காலம் முடிந்து வரும் 27ஆம் தேதி விடுதலையாக உள்ள நிலையில் திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து உடல்நிலை சரியாகி சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட சில மணி நேரத்தில் மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

இந்நிலையில் பெங்களூர் விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு கொரோனா தொற்றானது உறுதியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. கொரோனாவால் அவருக்கு நுரையீரல் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இதனால் அவர் விடுதலையாகும் தேதி தள்ளிப்போகலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |