Categories
மாநில செய்திகள்

சசிகலாவுக்கு சொந்தமான நிலத்தின் ஒரு பகுதி…. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு…..!!!

சசிகலாவுக்கு சொந்தமான நிலத்தின் ஒரு பகுதியை, பழைய மாமல்லபுரம் சாலை விரிவாக்கத்திற்காக, கையகப்படுத்தும் நடவடிக்கையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டு   பழைய மாமல்லபுரம் சாலை விரிவாக்கத்திற்காக, பனையூர் தோட்டத்தில் 784 சதுர மீட்டர் நிலத்தை கையகப்படுத்த அரசு  முடிவு செய்தது. ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சசிகலா தரப்பில்  சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நில இழப்பீடு தொடர்பாக எந்த ஒரு நோட்டீசும் வராததால், கையகப்படுத்தும் நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அதில்,சாலை விரிவாக்க திட்டத்திற்கு அந்த நிலம் அவசியமானது என்றும், வழக்கு நிலுவையில் இருப்பதன் காரணமாக நிலம் இன்னும் எடுக்கவில்லை என நெடுஞ்சாலைத்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி,  சசிகலாவின் நிலத்தை கையகப்படுத்தும் நடவடிக்கையை ரத்து செய்து உத்தரவிட்டார்.

Categories

Tech |