முன்னாள் தமிழக அமைச்சர் கோகுல இந்திரா சசிகலாவை திடீரென புகழ்ந்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் சசிகலா சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். அவரின் சிறை தண்டனை காலம் வருகின்ற ஜனவரி 27-ஆம் தேதி முடிவடைவதால், அவர் அன்று சிறையில் இருந்து வெளிவருகிறார். இந்நிலையில் முன்னாள் தமிழக அமைச்சர் கோகுல இந்திரா சசிகலாவை திடீரென புகழ்ந்து பேசியுள்ளார்.
கட்சியின் தலைவராக சசிகலா எங்கிருந்தாலும் நாங்கள் மரியாதையுடன் போற்றக்கூடியவர், அவரை தவறாக பேசினால் எங்களால் பொறுத்துக்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா அம்மா உறுதுணையாக இருந்து தவ வாழ்க்கை வாழ்ந்தவர் சசிகலா எனவும் புகழ்ந்துள்ளார்.