Categories
அரசியல்

“சசிகலாவுக்கு தொடரும் சிக்கல்…!” அப்போ மீண்டும் கம்பி எண்ண வேண்டியது தானா…??

சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூரு சிறையில் இருந்தபோது அவருக்கு சொகுசு வசதிகள் செய்யப்பட்டதாக சிறைத்துறை டிஐஜி ரூபா பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருந்தார். இதனையடுத்து சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் செய்யப்பட்டது உண்மைதானா என்பது குறித்து அறிய கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினோத்குமாரை நியமனம் செய்து உயர்மட்ட குழு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என ஊழல் தடுப்பு பிரிவு சார்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு புகார் மனு அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஆழ்வார் பேட்டையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கீதா தொடர்ந்த வழக்கில் கடந்த 25ஆம் தேதி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் சசிகலாவிடம் லஞ்சம் பெற்றதாக தலைமை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார்,காவலர் சுரேஷ், கஜராஜ் மகனுார் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கர்நாடக அரசு அனுமதி வழங்கியது. இது குறித்து பேசிய ஐஜி ரூபா எந்த அதிகாரியாக இருந்தாலும் லஞ்சம் பெற்றால் கண்டிப்பாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உன்னை நிலைநாட்டப்படும் என நான் நம்புகிறேன் எனவும் கூறியுள்ளார்.

Categories

Tech |