Categories
அரசியல் மாநில செய்திகள்

சசிகலாவை அதிமுகவில் இணைக்க 100% வாய்ப்பில்லை… முதல்வர் அதிரடி…!!!

சசிகலாவை அதிமுகவில் இணைக்க 100 சதவீதம் வாய்ப்பில்லை என்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்த தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் சசிகலா வருகின்ற ஜனவரி 27-ஆம் தேதி விடுதலை ஆகிறார். இதையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி சென்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசினார்.

இந்நிலையில் சசிகலா வருகையால் அதிமுகவில் எந்த மாற்றமும் ஏற்படாது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சசிகலாவை அதிமுகவில் இணைக்க 100 சதவீதம் வாய்ப்பில்லை என்று திட்டவட்டமாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் சசிகலாவுடன் இருந்த பெரும்பாலானோர் அதிமுகவுக்கு வந்துவிட்டனர். சிலர் தான் அவருடன் உள்ளனர் என்று கூறினார்.

Categories

Tech |