Categories
அரசியல் மாநில செய்திகள்

சசிகலாவை எங்குமே விமர்சிக்காதது ஏன் ? முதல்வர் பதில்

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா அவர்கள் அடக்குமுறைக்கு அஞ்ச மாட்டேன் என்று சசிகலா சொன்னதற்கு பதில் அவர்களிடம் தான் கேட்க வேண்டும். இது என்ன வம்பா இருக்கு ? இது ஜனநாயக நாடு. ஜனநாயக நாட்டில் அடக்குமுறையை நடத்த மாட்டார்கள். அவர்களிடம் கேட்கும் கேள்வியை என்னிடம் கேட்டால் நான் என்ன செய்வது? சசிகலா மீண்டும் கட்சி பணியில் ஈடுபடுவேன் என்று சொன்னதத்திற்கு பதிலளித்த முதல்வர், எங்களுடைய அமைச்சர் ஜெயக்குமார் சொல்லிவிட்டார், அண்ணன் கேபி முனுசாமி அவர்கள் சொல்லிவிட்டார்கள். ஏற்கனவே எங்கள் கருத்துக்களை சொல்லி இருக்கின்றோம்

அமைச்சர் வேலுமணி அண்ணன் – தம்பி மாதிரி என சொன்னதாக தவறான செய்தி வெளியிட்டு உள்ளார்கள். எங்க கட்சிக்குள் பேசியதை கட் பண்ணி போட்டு இருக்காங்க. மாவட்ட கட்சிக்குள்ள இருக்கின்ற பிரச்சனைகளை அண்ணன் – தம்பி மாதிரி இருக்கணும் என்று சொன்னதை  திரிச்சி போட்டுள்ளார்கள். நாங்க அண்ணா திமுக கட்சி நடத்திக் கொண்டிருக்கின்றோம். அண்ணா திமுகவில் யார் இருக்கிறார்கள்… யார் இல்லை என்று அமைச்சர்கள்  தெளிவுபடுத்தி விட்டார்.

சசிகலா வந்தால் தாக்கம் ஏற்படுமா  என்றால் நாங்கள் எப்படி சொல்வது அதை பற்றி ? கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டால் நீக்க தான் செய்வோம். கட்சிக்கு விரோதமாக செயல்படுகின்றவர்களை அடிப்படை உறுப்பினரில் இருந்து நீக்குவோம். எல்லா கட்சியிலும் நடப்பது தான்.  எங்க கட்சியில் மட்டுமல்ல, எந்த கட்சியிலும் அந்த கட்சிக்கு எதிராக செயல்பட்டு இருந்தால் அவர்களை நீக்குகிறார்கள். அதன் அடிப்படையில்தான் நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

சசிகலாவின் சொத்துக்கள் முடக்கப்பட்டு வருவது குறித்து, அந்த மாவட்ட ஆட்சித் தலைவரிடம் தான் கேட்க வேண்டும்.இதற்கும் அரசுக்கும் சம்பந்தமே கிடையாது. நீதிமன்ற உத்தரவை மாவட்ட ஆட்சியர் அமல்படுத்துகின்றார். நீதிமன்றம் தீர்ப்பு கொடுத்துள்ளது அந்த தீர்ப்புப்படி அவர்கள் செய்கிறார்கள் அரசாங்கத்திற்கும் இதற்கும் சம்பந்தம் கிடையாது

சசிகலாவை எதிர்த்துப் பேசுவதில்லை, டிடிவி தினகரனை பேசுகிறார்கள் மக்கள் மத்தியில் பேசுவது குறித்து, எங்க கட்சியில் இருப்பவர்களை தான் பேசவேண்டும். இல்லாதவர்கள் எதுக்கு பேசனும் ? டிடிவி தினகரன் தானே தலையிட்டு 18 பேரை கொண்டு போனாரு. 18 சட்டமன்ற உறுப்பினர்களை எங்களிடமிருந்து பிரிச்சு போயி,  கட்சியை உடைக்கணும்னு செய்யப்பட்டாரு, உடைக்க முடியவில்லை. அதற்கு பிறகு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை ஆரம்பித்தார் அதனாலதான் நாங்க பேசி கொண்டு இருக்கின்றோம் என முதல்வர் தெரிவித்தார்.

Categories

Tech |