Categories
அரசியல் மாநில செய்திகள்

சசிகலாவை சந்திக்கும் மிக முக்கிய பிரபலம்… ஈபிஎஸ் கவலை?…!!!

நடிகரும் எம்எல்ஏவுமான கருணாஸ் சசிகலாவை சந்திக்க இருப்பதாக கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது.

இதற்கு மத்தியில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து கொண்டிருந்த சசிகலா கடந்த ஜனவரி 27-ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார். அதன் பிறகு நேற்று முன்தினம் தமிழகம் திரும்பினார். அதனால் அரசியலில் ஏதாவது மாற்றம் ஏற்படுமா என அனைவரும் குழப்பத்தில் உள்ளனர். அதுமட்டுமன்றி கூட்டணிகள் குறித்த குழப்பம் நிலவி வருகிறது.

இந்நிலையில் நடிகரும் எம்எல்ஏவுமான கருணாஸ் சசிகலாவை சந்திக்க நேரம் கேட்டதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவர் இன்று சசிகலாவை நேரில் சந்தித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் நேற்று அளித்த பேட்டியில், அதிமுக கூட்டணியில் தொடர விரும்புவதாக கூறிய கருணாஸ் நாளை சசிகலாவை சந்திக்க இருப்பதாக கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |