தமிழகத்தில் அதிமுக வின் முக்கிய அமைச்சர்கள் சசிகலாவை விரைவில் சந்திக்க உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்த சசிகலா, தனது நான்கு ஆண்டு சிறை வாசத்தை முடித்து இன்று விடுதலையானார். இந்நிலையில் அதிமுக வின் முக்கிய அமைச்சர்கள் சசிகலாவை விரைவில் சந்திக்க உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
அதிலும் குறிப்பாக தென்மாவட்டங்களில் செல்வாக்கு மிக்க சமூகத்தை சேர்ந்த அமைச்சர்கள் சசிகலா வருகையை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். ஊர் பெயரை அடையாளமாகக் கொண்ட அமைச்சர், திருப்பதி சாமி பெயரை கொண்ட அமைச்சர், சூரிய உதயம் பெயர் கொண்ட அமைச்சர் இதில் அடங்குவார்கள்.