தமிழகத்தில் சசிகலா விவகாரத்தில் பாஜக தலையிடாது என்று தமிழக பாஜக பொறுப்பாளர் ரவி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது.
இதற்கு மத்தியில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து கொண்டிருந்த சசிகலா கடந்த ஜனவரி 27-ஆம் தேதி விடுதலையானார். அதன்பிறகு பிப்ரவரி 8-ஆம் தேதி தமிழகம் திரும்பினார். அவரின் வருகை அரசியலில் ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்தும் என அனைவரும் குழப்பத்தில் உள்ளனர்.
இந்நிலையில் தமிழக பாஜக பொறுப்பாளரான சி.டி. ரவி அவர்களிடம் சசிகலா குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், பல ஆண்டு கால அரசியல் அனுபவம் கொண்ட முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆர்கே இருவருக்கும் சசிகலா விவகாரத்தை எவ்வாறு கையாள வேண்டும் என்பது தெரியும். இது அவர்களின் உட்கட்சி விவகாரம். இதில் பாஜக தலையிடாது என அவர் கூறியுள்ளார்.