சசிகலா பெங்களுருவில் இருந்து சென்னை வந்து கொண்டு இருக்கும் நிலையில் சசிகலா உட்பட யாரும் அதிமுக கொடியை பயன்படுத்தக்கூடாது என போலீஸ் உத்தரவு போட்டு இருந்த நிலையில் சசிகலாவை வரவேற்க குவிந்துள்ள பல தொண்டர்கள் கைகளில் அதிமுக கொடியை வைத்துள்ளார்கள். அதே போல சசிகலாவும் காரில் அதிமுக கொடியுடனே வருகின்றார்.
சசிகலா தமிழக எல்லை வந்தடையும் போது பட்டாசு வெடித்து வரவேற்பதற்கான ஏற்பாடுகளை அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் செய்திருக்கிறார்கள். காவல்துறையினர் இதுபோன்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கான பணிகளும் ஈடுபட்ட போதிலும் கூட உற்சாக மிகுதியில் போலீஸ் உத்தரவையும் மீறி தொண்டர்கள் பட்டாசு வெடித்து வரவேற்கின்றார்கள்.
அது மட்டுமல்லாமல் போக்குவரத்தை சீர் செய்வதற்கான பணிகளிலும் காவல்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு இருக்கிறார்கள். இதனிடையே தமிழக எல்லையை சசிகலா வந்தடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது தமிழக எல்லையில் சசிகலாவை உற்சாகமாக வரவேற்பு வரவேற்க வேண்டும் என்பதற்காக அவரது ஆதரவாளர்கள் காத்திருக்கிறார்கள்.
இந்நிலையில் சசிகலாவை வரவேற்க அமைக்கப்பட்டிருந்த மேடைகள், கட்டப்பட்டு இருந்த பேனர்களை அகற்றியுள்ளது போலீஸ். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் நெடுஞ்சாலையில் இருந்த மேடைகள் பேனர்கள் அகற்றப்பட்டன. இது சசிகலா ஆதரவாளர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.