Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுகவில் மீண்டும் சசிகலா…? யார் வேண்டுமானாலும் வரலாம்…. ஓபிஎஸ் பேச்சு…!!!

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மதுரை அண்ணாநகர் பகுதியில் உள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கியில் இருந்த தேவரின் 13 கிலோ எடை கொண்ட தங்கக் கவசத்தை தேவர் குடும்பத்திடம் ஒப்படைக்கும் நிகழ்வில் ஓபிஎஸ் கலந்து கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.அப்போது சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்க்கப்படுமா? என்று செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஓபிஎஸ், அரசியலில் யார் வேண்டுமானாலும் வரலாம். ஏற்றுக் கொள்வதும், ஏற்றுக் கொள்ளாததும் மக்கள் விருப்பமாகும்.

அதிமுக புரட்சித்தலைவர் ஆரம்பித்த இயக்கம். இன்றளவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்களால் கழகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சசிகலா சேர்ப்பது குறித்து தலைமை கழக நிர்வாகிகள் சேர்ந்து கலந்து ஆலோசித்து முடிவெடுப்பார்கள் என்று கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், ஜெயலலிதா அவர்கள் ஏழை எளிய மக்களுக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார். தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால் அம்மா திட்டங்களை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி வருகிறோம். தாலிக்கு தங்கம், அம்மா உணவகம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை திமுக அரசு நிறுத்தாமல் வழங்க வேண்டும் என்று பேசியுள்ளார்.

Categories

Tech |