சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற பிறகு கலந்து 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அதிமுக பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட்டு, சசிகலா மற்றும் டிடிவி தினகரனை கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் துணைப் பொதுச் செயலாளர் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டது. இதனையடுத்து 2017ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானம் செல்லாது என அறிவிக்கவும், 2016 ஆம் ஆண்டு தன்னை பொதுச்செயலாளராக அறிவித்த தீர்மானம் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ்-ஐ கட்டுப்படுத்தும் என அறிவிக்கக்கோரி சசிகலா வழக்கு தொடர்ந்தார்.
அதுமட்டுமல்லாமல் அதிமுகவின் புதிதாக உருவாக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர் பதவிகள் சட்டவிரோதம் என உத்திரவிடவும் அவர் கோரியிருந்தார். இந்நிலையில் சசிகலா வழக்கை நிராகரிக்குமாறு சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு விசாரணையின் போது, பொதுச் செயலாளராக சசிகலா உரிமை கோர வாய்ப்பு இல்லை. கட்சியும் சின்னமும் தங்களிடம் இருப்பதை தேர்தல் ஆணையம் உறுதி செய்துள்ளதாக கூறினார். மேலும் இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் சென்னை உரிமையியல் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகின்றது.