சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு உரிமையான 2000 கோடி ரூபாய் சொத்துகளை வருமான வரித்துறை முடக்கியுள்ளது.
சசிகலா மற்றும் அவரின் உறவினர்களுக்கு உரிமையான வீடு, அலுவலகம் மற்றும் வணிக வளாகம் என 187 இடங்களில் கடந்த 2014ஆம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அந்த சோதனையில் சசிகலா 60க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களை தொடங்கி இருப்பதும் அதில் ரூ.1,500 கோடி வரையில் வரி ஏய்ப்பு செய்து இருப்பதும் தெரிய வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சசிகலாவுக்கு சொந்தமான ரூ.1, 600 கோடி மதிப்பிலான பினாமி சொத்துகள் வருமான வரித்துறை அதிகாரிகள் முடக்கினர்.
இந்த நிலையில் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு உரிமையான 2 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கப்பட்டன. அவர்கள் மீது பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் வருமான வரித் துறை நடவடிக்கை எடுத்தது. மேலும் சிறுதாவூர் பங்களா,கொடநாடு எஸ்டேட் போன்ற சொத்துகளை வருமான வரித்துறை முழுமையாக முடக்கியது.முடக்கப்பட்ட சொத்துக்களின் மொத்த மதிப்பு 2 ஆயிரம் கோடி ரூபாய் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.