சசிகலா காலில் விழுவதை தவிர குருமூர்த்திக்கு வேறு வழி இல்லை என்று ஆளூர் ஷாநவாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவிட்டது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்து கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து தீவிரப் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே தேர்தல் பிரசாரத்தில் மோதல் போக்கு நிலவிக் கொண்டிருக்கிறது. இரண்டு கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து பல்வேறு கருத்துக்களை கூறி வருகிறார்கள்.
இந்நிலையில் திமுகவை எதிர்க்க வேண்டுமெனில் சசிகலாவை அதிமுகவில் சேர்க்க வேண்டும் என்று துக்ளக் விழாவில் குருமூர்த்தி பேசியுள்ளார். இது குறித்து ஆளுர் ஷாநவாஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “சசிகலாவுக்கு எதிராக முதல்வர் பழனிசாமி கொம்பு சீவி, பிறகு பன்னீர்செல்வம் கையில் எடுத்து, வேல் யாத்திரை நடத்தி, அமித்ஷாவை வர வைத்து ரஜினியை எதிர்பார்த்து எல்லாம் புஷ்வானம் ஆனதால், தொடங்கிய இடத்திற்கே வந்து நிற்கிறார் குருமூர்த்தி. சசிகலா காலில் விழுவதை தவிர வழியில்லை! படுத்தேவிட்டார்கள்” என்று அவர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.