பெங்களூரு சிறையில் சசிகலா கன்னடம் மற்றும் கம்ப்யூட்டர் பயின்று நல்ல பயிற்சி பெற்றுள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற சசிகலா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையும் 10 கோடியே 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. தற்போது அவரது தண்டனை விரைவில் முடிவடையவுள்ளது. இவருக்கான அபராதத் தொகையும் நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டுவிட்டது. இவர் விரைவில் விடுதலை ஆவார் என அனைவராலும் எதிர்ப்பார்க்கப்பட்டு வருகிறது.
இவர் சிறையில் இருந்த காலத்தில் பப்பாளி வளர்ப்பு, அணிகலன்கள் செய்வது, கன்னடம், கம்ப்யூட்டர் போன்றவற்றை கற்றரிந்துள்ளார். அங்குள்ள தோட்டத்தில் அரை ஏக்கரில் பப்பாளி மரங்கள் பயிரிட்டு வளர்த்திருக்கிறார். அணிகலன்கள், கலைப்பொருட்கள் செய்வது தொடர்பான பணிகளிலும் ஈடுபட்டிருக்கிறார்.
அதுமட்டுமின்றி, கன்னடம் கற்றுக்கொண்டதுடன் கம்யூட்டரும் பயின்றிருக்கிறார். இவர் கன்னட மொழியினை நன்கு எழுதவும் வாசிக்கவும் செய்கிறார் என சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.