Categories
அரசியல் மாநில செய்திகள்

சசிகலா சேர்ப்பு… கழகத்தின் முடிவு… ஓபிஎஸ் சொன்னது சரி… ஜேசிடி பிரபாகர்!!

சசிகலாவை சேர்ப்பது பற்றி தலைமை கழக நிர்வாகிகள் முடிவு எடுப்பது என ஓபிஎஸ் கூறியது சரியே என்றுசெய்தி தொடர்பாளர் ஜேசிடி பிரபாகர் கூறியுள்ளார்.

சமீபத்தில் சென்னை ராமாவரம் தோட்டத்திலுள்ள எம்ஜிஆரின் இல்லத்திற்கு சென்றிருந்த சசிகலா அதிமுக வெற்றி பெற நாம் அனைவரும் பகையை மறந்து ஒன்றிணைய வேண்டும் என ஓபிஎஸ் இபிஎஸ் ஆகிய இருவருக்கு அழைப்பு விடுத்திருந்தார். இதுபற்றி அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்திடம் செய்தியாளர்கள் கருத்து கேட்டதற்கு, அரசியலில் யார் வேண்டுமானாலும் வரலாம். ஏற்றுக் கொள்வதும், ஏற்றுக் கொள்ளாததும் மக்கள் விருப்பமாகும்.

அதிமுக புரட்சித் தலைவர் ஆரம்பித்த இயக்கம்.. இன்றளவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்களால் கழகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும் அதிமுகவில் மீண்டும் சசிகலாவை சேர்ப்பது குறித்து தலைமை கழக நிர்வாகிகள் கலந்து பேசி முடிவு எடுப்பார்கள் என பதிலளித்தார். ஆனால் ஓபிஎஸ் இன் இந்தக் கருத்துக்கு எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களான முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், கேபி. முனுசாமி ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் சசிகலாவை சேர்ப்பது பற்றி தலைமை கழக நிர்வாகிகள் முடிவு எடுப்பது என ஓபிஎஸ் கூறியது சரியே என்று அதிமுக அமைப்புச் செயலாளர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அதிமுக அமைப்புச் செயலாளர் ஜேசிடி பிரபாகர் கூறியதாவது, சசிகலாவை சேர்ப்பது பற்றி தலைமை கழக நிர்வாகிகள் முடிவு எடுப்பது என ஓபிஎஸ் கூறியது சரியே. அதிமுகவின் எதிர்கால நலனை சிந்திக்கக்கூடிய தலைமை கழக நிர்வாகிகள் உரிய முடிவை எடுக்க வேண்டும். தர்மயுத்தம் மூலம் இணையும் போது யாரையும் சேர்க்கக் கூடாது என சொன்னதை இப்போது ஒப்பிட முடியாது என்றார்.

மேலும் ஓபிஎஸ் – இபிஎஸ் இடையே கருத்து வேறுபாடுகள் இல்லை என நம்புகிறேன். எம்ஜிஆரை கட்சியிலிருந்து நீக்கியதற்கு கருணாநிதி மட்டும் காரணம் இல்லை.. உடன் இருந்தவர்களும் தான்..
அதிமுக தொண்டர்கள் யாரும் சசிகலாவை அவரது சுற்றுப்பயணத்தில் சந்திக்க மாட்டார்கள் என்று கூறினார்.

Categories

Tech |