நாளை காலை 10.30மணிக்கு சசிகலா விடுதலை செய்யப்படுகின்றார் என தகவல் வெளியாகியுள்ளது.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் சிறை தண்டனை பெற்ற சசிகலா பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 2016ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி அவர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். அவருடைய நான்கு ஆண்டு கால சிறை தண்டனை என்பது நாளையதோடு நிறைவடைய இருக்கின்றது.இதனிடையே சசிகலா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அவர்க்குப் பெங்களூர் விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் நாளை காலை 10.30 மணிக்கு அவர் விடுதலை செய்யப்படுகின்றார் என சொல்லப்படுகின்றது. சிறைத்துறை நடவடிக்கையை எல்லாம் முடித்து அவர் விடுதலை ஆவதால் அவரின் ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.