Categories
தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியில் சசிகலா புஷ்பா வீடு மீது தாக்குதல்…. திமுக கவுன்சிலர் ராமகிருஷ்ணன் கைது..!!

தூத்துக்குடியில் சசிகலா புஷ்பா வீடு மீது தாக்குதல் நடத்திய புகார் தொடர்பாக  திமுக கவுன்சிலர் ராமகிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடியில் உள்ள தபால் தந்தி காலணி 8ஆவது தெருவில் வசித்து வருகிறார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பா. இவர் தற்போது பாஜக மாநில துணைத்தலைவராக உள்ளார். இவர் நாகர்கோவிலில் நடந்த பாஜக கூட்டத்திற்கு சென்ற நிலையில், இதனை பயன்படுத்தி வீட்டை மர்ம நபர்கள் கடுமையாக தாக்குதல் நடத்தியுள்ளனர். அதாவது, பூந்தொட்டி மற்றும் ஜன்னல் கதவுகளை உடைத்து எறிந்து, சசிகலா புஷ்பாவின் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் கண்ணாடிகளை உடைத்து எறிந்துள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த சிப்காட் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். அதேபோல் இந்த பகுதியில், அவர்கள் வீட்டின்  சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.இந்நிலையில் தூத்துக்குடியில் சசிகலா புஷ்பா வீடு மீது தாக்குதல் நடத்திய புகார் தொடர்பாக  திமுக கவுன்சிலர் ராமகிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். 3 திமுக கவுன்சிலர் உட்பட 13 பேர் மீது வழக்கு பதிவான நிலையில், லெவஞ்சிபுரம் 45வது வார்டு உறுப்பினர் ராமகிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ளார்

Categories

Tech |