தமிழகத்தில் அதிமுக கட்சியின் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பழனி முருகன் கோவிலில் முடி காணிக்கை செலுத்தினார்.
தமிழகத்தின் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதன் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து கொண்டிருந்த சசிகலா கடந்த ஜனவரி 27-ஆம் தேதி விடுதலையானார். அதன் பிறகு நேற்று முன்தினம் தமிழகம் திரும்பினார். அவரின் வருகையை அரசியலில் ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்துமா என அனைவரும் குழப்பத்தில் உள்ளனர்.
இதற்கு மத்தியில் கூட்டணி குறித்த குழப்பம் நிலவி வருகிறது. இந்நிலையில் பழனி முருகன் கோவிலில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் முடி காணிக்கை செலுத்தினார். அவரிடம் சசிகலா வருகையால் திமுகவில் பிளவு ஏற்படுமா என்ற கேள்விக்கு பதில் சொல்லாமல் சிரித்தபடியே சென்றார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓபிஎஸ் முதல்வராக இருந்தபோது சசிகலா முதல்வராக வேண்டும் என்று முதலில் குரல் கொடுத்தவர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.