சசிகலா விஷயத்தில் நாங்கள் தெளிவாக இருப்பதாகவும் பத்திரிக்கையாளர்களே தேவையற்ற செய்தியை வெளியிடுவதாகவும் கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார்
வேலூர் மாவட்டத்தில் இருக்கும் மாற்று திறனாளிகளுக்கு ஆட்சியர் அலுவலகத்தின் வளாகத்தில் வைத்து தனித்துவமிக்க அடையாள அட்டை காதுகேளாதோருக்கான தொழில் நுட்ப கருவி பேட்டரி மூலம் இயங்கும் நாற்காலி போன்ற வற்றை 200 பயனாளிகளுக்கு 40 புள்ளி 80 லட்சம் மதிப் பெண் வழங்கும் விழா நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக தமிழக வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறையின் அமைச்சரான கே சி வீரமணி பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அளித்தார்.
விழா முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த கே.சி.வீரமணி கூறுகையில் “சசிகலாவை எதிர்த்து தான் கட்சியும் ஆட்சியும் நடக்கின்றது. அவர் தேவை இல்லாதவர், மக்களால் வெறுக்கப்படுபவர் என்ற சூழலில் தான் ஆட்சி போய்க்கொண்டிருக்கிறது. மறுபடியும் மறுபடியும் பத்திரிக்கையாளர்கள் மட்டுமே செய்திகளை உருவாக்க வேண்டும் என்ற காரணத்திற்காக அவர் பற்றி தேவையற்ற செய்திகளை கொடுக்கின்றனர். ஆனால் எங்களைப் பொருத்தவரை நாங்கள் மிகவும் தெளிவாகவே இருந்து வருகிறோம்” என கூறியுள்ளார்