Categories
மாநில செய்திகள்

“சசிகலா வைத்திலிங்கம் சந்திப்பு எதார்த்தமானது அல்ல”….. டெல்டா மாவட்டத்தில் தீயாய் பரவும் செய்தி…..!!!

அதிமுகம் உள்கட்சி மோதல் குறித்த செய்திகள் வரிசை கட்டி வந்த நிலையில் தற்போது தமிழக முழுவதும் பல்வேறு ஊர்களில் மின் கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். அதன்படி தஞ்சை ரயில் நிலையம் அருகில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டு திமுக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் அமைச்சர் காமராஜ் தலைமை தாங்கினார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், மின் கட்டணம் உயர்வை நினைத்து மக்கள் தங்களுடைய வேதனை தெரிவித்து வருகின்றனர். உடனடியாக மின் கட்டணம் திரும்ப பெற வேண்டும் என்பதை அதிமுகவின் கோரிக்கையாகவும் மக்களின் கோரிக்கையாகவும் உள்ளது.

அதனைத் தொடர்ந்து அதிமுக ஒருங்கிணைந்த தலைவர் எடப்பாடி தான். எடப்பாடி தலைமையில் தான் அதிமுக உள்ளது. வேறு யாரும் எதை சொன்னாலும் அவர்கள் ஆசைக்கு சொல்லிக்கொள்ள வேண்டியதுதான், நடக்கப்போவதில்லை. மேலும் சசிகலா வைத்தியலிங்கம் சந்திப்பு எதார்த்தமானது அல்ல. இது திட்டமிட்டு நடைபெற்ற ஒன்று. அதிமுகவை வளம் பெற செய்யவும், பலம் பெற செய்யும் அதிமுகவால் பலன் அடைந்தவர்கள் நினைக்க வேண்டும். ஆனால் அதை விட்டுவிட்டு திமுகவுக்கு துணை போகும் வேலையில் ஈடுபது அதிமுகவை அளிக்கும் வேலையாக தான் இருக்கும் என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து சசிகலா வைத்தியலிங்கம், ஆர்.காமராஜ் ஆகியோர் டெல்டா மாவட்டங்களை சேர்ந்தவர். காமராஜர் சசிகலாவின் சகோதரர் திவாகரனும் பொது இடங்களில் இப்போதும் நட்பு பாராட்டி வருகின்றனர். அப்படியிருக்க சசிகலாவை விமர்சித்து பேசி இருப்பது டெல்டா மாவட்ட அதிமுகவில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |