முன்னணி நடிகர் சசிகுமாரின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் திரையுலகில் சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சசிகுமார். அதன்பிறகு நடிப்பில் கவனம் செலுத்தியவர் நாடோடிகள், சுந்தரபாண்டியன், குட்டி புலி, கிடாரி உள்ளிட்ட பல படங்களில் நடித்து தற்போது முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார். இவர் தற்போது, எம்.ஜி.ஆர்.மகன், ராஜவம்சம், கொம்புவச்ச சிங்கம்டா, பகைவனுக்கு அருள்வாய், முந்தானை முடிச்சு 2, நாநா என பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.
இந்நிலையில் சசிகுமார் மேலும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதன்படி கழுகு பட இயக்குனர் சத்யசிவாவின் படத்தில் சசிகுமார் நடிக்க உள்ளார். மேலும் இப்படம் சஸ்பென்ஸ் திரில்லர் படமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.