Categories
சினிமா தமிழ் சினிமா

சசிகுமாரின் அடுத்த பட இயக்குனர் யார் தெரியுமா?… வெளியான புதிய தகவல்…!!!

சசிக்குமார் அடுத்ததாக நடிக்கும் படத்தை மாரிமுத்து இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட கலைஞராக வலம் வருபவர் சசிகுமார். இவர் நடிப்பில் உருவான எம்.ஜி.ஆர் மகன், உடன்பிறப்பே ஆகிய படங்கள் சமீபத்தில் நேரடியாக ஓடிடியில் வெளியாகியிருந்தது. மேலும் சசிகுமார், நிக்கி கல்ராணி இணைந்து நடித்துள்ள ராஜவம்சம் படம் வருகிற நவம்பர் 26-ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாக உள்ளது.

Actor Sasikumar Commits Suicide At The Age of 43 | India Forums

இந்நிலையில் சசிகுமார் அடுத்ததாக நடிக்கும் படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இவரின் அடுத்த படத்தை தொரட்டி பட இயக்குனர் மாரிமுத்து இயக்க இருக்கிறார். ஸ்டாண்டர்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைக்கிறார். விரைவில் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள், நடிகைகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |