மின்சாரம் தாக்கி கொத்தனார் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள கரிசல்பட்டி கிராமத்தில் கொத்தனாரான முத்துசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மல்லிகா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் முத்துசாமி தனது உறவினர் வீட்டில் சடங்கு நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். அங்கு சடங்கு முடிந்த பிறகு சாப்பாடு பரிமாறப்பட்டது. இந்நிலையில் பந்தி நடந்த இடத்தில் போடப்பட்டிருந்த பந்தலுக்கு அருகில் உள்ள மின்கம்பம் வழியாக மின்சாரம் பாய்ந்துள்ளது.
இதனை அறியாத முத்துச்சாமி பந்தலுக்கு போடப்பட்டிருந்த மின்கம்பியை எதிர்பாராதவிதமாக பிடித்துள்ளார். அப்போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட முத்துச்சாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முத்துசாமியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.