Categories
தேசிய செய்திகள்

சடலங்களை கங்கை நதியில் வீசுவதை தடுக்கவும்…. மத்திய அரசு…..!!!!

இந்தியாவில் முதலில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் ஏற்படும் உயிரிழப்பை எண்ணிக்கையும் அதிகம். அதுமட்டுமல்லாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஒரு சில மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாமல் ஆம்புலன்சில் வைத்து சிகிச்சை அளிக்கப் படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழப்போரின் எண்ணிக்கை ஏராளம். அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளில் இடம் இல்லாமல் தவித்து வருகிறார்கள். அதுமட்டுமன்றி கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்களை மயானங்களில் எரிப்பதற்கு கூட இடமில்லாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் சில சடலங்களை ஏரி குளங்களில் வீசிச் செல்கின்றனர். இந்நிலையில் கொரோனாவால் இறந்தவர்களின் சடலங்களை கங்கை நதியில் வீசுவதை தடுக்க வேண்டும் என உத்திரப்பிரதேசம் மற்றும் பீகார் அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. சடலங்கள் பாதுகாப்பாக கையாளப்படுவது மற்றும் கண்ணியமான முறையில் கவனம் செய்வதையும் கண்காணிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.

Categories

Tech |