Categories
தேசிய செய்திகள்

சடலங்கள் மிதக்காமல் இருக்க கண்காணிப்பு குழு….. அரசு அதிரடி உத்தரவு….!!!!

இந்தியாவில் முதலில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் ஏற்படும் உயிரிழப்பை எண்ணிக்கையும் அதிகம். அதுமட்டுமல்லாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஒரு சில மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாமல் ஆம்புலன்சில் வைத்து சிகிச்சை அளிக்கப் படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழப்போரின் எண்ணிக்கை ஏராளம்.

அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன் பலனாக இந்தியாவில் கடந்த இரண்டு நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. இருந்தாலும் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளின் உறவினர்களின் கதறல் நாளுக்கு நாள் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. இந்தியாவிற்கு கொரோனா நிவாரண நிதிகளைக் கொடுத்து உதவ பல நாடுகள் முன்வந்துள்ளன.

இந்நிலையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்கள் எரிப்பதற்கு இடமில்லாமல் ஏரி குளங்களில் வீசப்படும் அவலம் ஏற்பட்டுள்ளது. காஜிபூரில் உள்ள கங்கையில் 24 உடல்கள் கிடந்தன. இதுவரை இந்த உடல்கள் எங்கிருந்து வந்தன? யாருடையது? கொரோனாவால் இறந்தவர்களா? என்று எதையும் கண்டுபிடிக்க முடியாமல் உத்திரப்பிரதேச மாநில அரசாங்கம் திணறி வருகிறது. கங்கை நதியின் இருகரைகளிலும் போலீசார் பாதுகாப்புக்கு மத்தியிலும் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தவிர்ப்பதற்காக தற்போது கண்காணிப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |