துபாயில் யாருமில்லாத இடத்தில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சடலத்திலிருந்து எடுக்கப்பட்ட பூச்சி மற்றும் புழுக்களை வைத்து அவர் இறந்த மணி நேரத்தை துல்லியமாக அதிகாரிகள் முடிவு செய்துள்ளார்கள்.
துபாயில் யாரும் தங்காத கட்டிடத்திலிருந்து அதிகாரிகள் சடலம் ஒன்றை எடுத்துள்ளார்கள். இந்நிலையில் அந்த சடலத்தில் தோன்றிய பூச்சி மற்றும் புழுக்களை வைத்து ஆய்வின் மூலம் அவர் இறந்த மணி நேரத்தை அதிகாரிகள் துல்லியமாக கண்டுபிடித்துள்ளார்கள்.
அதன்படி அந்த சடலம் 63 மணிநேரம் 30 நிமிடங்களுக்கு முன்னதாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து துபாய் போலீஸ் துறையின் தடயம் மற்றும் குற்றவியல் இயக்குனரான அகமத் கூறியதாவது, ஒரு கொலையோ அல்லது விபத்திலோ ஏற்பட்ட உயிரிழப்பு தொடர்பாக ஏதேனும் சந்தேகமிருந்தால் அதற்கு தடவியல் அறிவியலை முக்கியமாக உதவி செய்யும் என்று தெரிவித்துள்ளார்கள்.
அதாவது சந்தேகம் எழுந்த நபரது உடலில் முதன்முதலாக தோன்றும் லார்வா எனப்படும் சிறிய புழுவையோ அல்லது முழுவதுமாக உருமாற்றம் பெற்ற பூச்சிகளையோ எடுத்து ஆய்வு செய்யும்போது அவர் எப்போது உயிரிழந்துள்ளார் என்று துல்லியமாகக் கணிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.