Categories
Uncategorized

சடலத்தை தண்ணீரில் கயிறு கட்டி இழுத்துச் சென்ற அவலம்…. என்ன காரணம் தெரியும?….!!!!

தொடர் மழையால் சுடுகாட்டுக்குச் செல்லும் பாதை முழுவதும் தண்ணீரால் சூழப்பட்டது. அதனால் இறந்தவர்களின் உடலை கயிறு கட்டி இழுத்துச் செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

தொடர் மழையால் திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட மதுரா சஞ்சீவி ராயபுரம் கிராமத்தில் சுடுகாட்டுக்குச் செல்லும் வழியில் 6 அடிக்கு மேல் ஆற்று நீர் நிரம்பி வழிகிறது.

அதனால் இறந்தவர்களின் உடலை கொண்டு செல்ல முடியாமல் கயிறு கட்டி இழுத்துச் செல்லும் நிலமை பொது மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே அந்த கிராம மக்கள் சுடுகாட்டிற்கு செல்வதற்கு, பாலம் கட்டித்தர வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

Categories

Tech |