ரயில்நிலையத்தில் வாலிபர் சடலமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடி ரயில்நிலையத்தில் 26 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் சடலமாக கிடந்துள்ளார். இதனைக் கண்ட பயணிகள் ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பின் ரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த இளைஞரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.