தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூர் மாவட்டத்தில் உள்ள கொளந்தானூரில் பகுதியில் கூலி தொழிலாளியான அன்புமணி(32) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு நிர்மலா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 1 1/2 வருடமாக நிர்மலா தனது கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார். நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அன்புமணி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அன்புமணியின் சடலத்தைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் நிர்மலா பிரிந்து சென்றதால் மன உளைச்சலில் அன்புமணி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.