காதல் தோல்வியில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்திலுள்ள வேலப்பாடி கண்ணங்குடி பகுதியில் டைல்ஸ் ஓட்டும் தொழிலாளியான நவீன்(22) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பாசி முத்தான் ஓடை பாலத்தில் இருக்கும் கம்பியில் பிளாஸ்டிக் டியூபால் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வாலிபரின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் நவீன் தரங்கம்பாடியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணை காதலித்தது தெரியவந்துள்ளது. இருவரும் செல்போனில் பேசிக் கொண்டிருந்த போது திடீரென தகராறு ஏற்பட்டது. அதன் பிறகு அந்த பெண் காதலை முறித்து கொண்டதால் மன உளைச்சலில் இருந்த நவீன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.