சிறுவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனுமந்தராயன் கோட்டை பகுதியில் கூலி தொழிலாளியான முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மனோஜ் குமார், கோகுல்நாத் என்ற 2 மகன்கள் இருந்துள்ளனர். இதில் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் கோகுல்நாத் 5-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கோகுல்நாத் தனது நண்பரான விக்னேஷ் என்ற மாணவனுடன் அப்பகுதியில் இருக்கும் குடகனாற்றுக்கு குளிப்பதற்காக சென்றுள்ளான்.
அப்போது ஆழமான பகுதிக்கு சென்றதால் சிறுவன் தண்ணீரில் மூழ்கி விட்டான். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் தண்ணீரில் மூழ்கிய சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் கோகுல்நாத் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.