ரயிலில் அடிபட்டு இன்ஜினீயரிங் கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்திலுள்ள தொங்கனூர் அருகிலிருக்கும் தண்டவாளத்தில் வாலிபர் ஒருவரின் சடலம் கிடப்பதாக ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த வாலிபரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட நபர் பாப்பிரெட்டிப்பட்டி கிராமத்தில் வசித்த காளியப்பன் என்பது தெரியவந்துள்ளது.
இவர் அப்பகுதியில் இருக்கும் இன்ஜினியரிங் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் காளியப்பன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது தண்டவாளத்தை கடக்கும் போது ரயில் எங்கு இறந்தாரா என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.