Categories
அரசியல்

சட்டசபையில் அணில் விட்ட செல்லூர் ராஜு….. ட்வீட்டரில் பதிலளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி…!!!!

அமைச்சர் செந்தில் பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தாலே எங்கு பார்த்தாலும் மின்தடை ஏற்படுகிறது. இதை வைத்து எதிர்க்கட்சிகளும் திமுகவை கிண்டலடித்து வருகிறது. இந்நிலையில் எங்கள் ஆட்சியில் நாங்கள் மின்தடை ஏற்படாமல் வைத்திருந்தோம் ஆனால் உங்கள் ஆட்சியில் எங்கு பார்த்தாலும் மின்தடை ஏற்படுகிறது என அதிமுகவினர் சட்டசபையில் கூறியுள்ளனர். இதற்கு அமைச்சர் செந்தில்பாலாஜி மின் வயர்களை அணில்கள் கடிப்பதால் தான் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது எனக் கூறியுள்ளார். இந்த விளக்கத்தைக் கேட்டு பல்வேறு தரப்பினரும் திமுகவை கேலி செய்தனர். ஆனால் திமுக அரசு அணில்கள் கேபிள்களை கடிப்பது போன்ற படங்களை காட்டினர்.

இந்நிலையில் சட்டசபை கூட்டத்தின் போது முன்னாள் அமைச்சர் செந்தில் ராஜு மீண்டும் அணில் விவகாரத்தை கையில் எடுத்துள்ளார். இவர் மதுரையில் சித்திரை திருவிழா தொடங்க இருப்பதால்  ஊருக்குள் அணில்கள் வராமல் மின்துறை அமைச்சர் பார்த்துக்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார். இதைக்கேட்டு சட்ட சபையில் இருந்த அதிமுகவினர் பலரும் சிரித்து வரவேற்றனர். இந்த கூட்டத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜியும் இருந்தார். ஆனால் அமைச்சர் செந்தில் பாலாஜி  அதற்கு எந்த ஒரு பதிலையும் அளிக்கவில்லை. தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் செந்தில் பாலாஜி இதற்கான தகுந்த பதிலை அளித்துள்ளார்.

அவர் தமிழகத்தில் மின்தடை இல்லை என்பதை தெரிந்து கொண்டே தடை வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என தெர்மோகோல் விஞ்ஞானி கூறியிருக்கிறார். எங்கள் பணியை நாங்கள் சிறப்பாகத்தான் செய்து கொண்டு இருக்கிறோம். கோடை வெயிலில் வைகை நீர் ஆவியாகாமல் தடுக்க உடனே தெர்மாகோல் எடுத்துக் கொண்டு செல்லுங்கள் என கூறியுள்ளார். இதற்கு முன்பு அதிமுக ஆட்சியில் இருந்தபோது வைகை நீர் ஆவியாகாமல் தடுப்பதற்காக தெர்மாகோலில் டேப் ஒட்டி  நீரில் மிதக்க விடப்பட்டது. இந்த சம்பவம் அப்போது பெரும் சர்ச்சையாக பேசப்பட்டது. ஆனால் முன்னால் அமைச்சர் செல்லூர் ராஜூ தெர்மாகோல் திட்டம் ஒரு நல்ல திட்டமே ஆகும். ஆனால் அது பயன்படுத்திய விதம் தான் சரியில்லாமல் போனது என கூறியுள்ளார்.

Categories

Tech |