Categories
மாநில செய்திகள்

சட்டசபையில் கருணாநிதி படம்: அடுத்த மாதம் திறப்பு…!!!

டெல்லியில் கடந்த 19ஆம் தேதி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் குடியரசு தலைவரை நேரில் சந்தித்து சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழாவில் தலைமை தாங்குவதற்கும், சட்டமன்றத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் உருவப்படத்தை திறந்து வைக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்திருந்தார். அதுமட்டுமில்லாமல், மதுரையில் கலைஞர் பெயரில் அமைக்கப்பட்டுவரும் நூலகத்திற்கு அடிக்கல் நாட்டவும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு அழைப்பு விடுத்திருந்தார்.

இந்நிலையில் முதல்வர் முக ஸ்டாலின் அழைப்பை ஏற்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகஸ்ட் முதல் வாரத்தில் தமிழகத்திற்கு வர உள்ள நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முழு உருவப்படம் சட்டசபையில் அடுத்த மாதம் முதல் வாரத்தில் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்துவைக்கிறார். இதுகுறித்து சபாநாயகர் அப்பாவு நேற்று அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த விழாவிற்கு பல்வேறு கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |