கர்நாடகா சட்டசபையில் நேற்று எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா பல்லாரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மின்தடையால் 3 நோய்கள் உயிரிழந்தது குறித்து பிரச்சினை கிளப்பி பேசினார். சித்தராமையாவின் பேச்சுக்கு சட்டத்துறை மந்திரி மாதுசாமி ஆட்சேபம் தெரிவித்தார். அதற்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர். பதிலுக்கு ஆளும் பா.ஜனதா மந்திரிகள் மற்றும் உறுப்பினர்களும் எழுந்து நின்று குரலை உயர்த்தி பேசினார்.
இரு தரப்பினர் ஒரே நேரத்தில் கூச்சலிட்டதால் யார் என்ன பேசுகிறார்கள் என்பது புரியவே இல்லை. இதனையடுத்து சபாநாயகர் காகேரி அனைவரும் அமைதி காக்கும்படி வேண்டுகோள் விடுத்தார். ஆனால் அவர்கள் தொடர்ந்து கூச்சலிட்டபடியே இருந்தனர். இதனால் கோபமடைந்த சபாநாயகர் காகேரி உறுப்பினர்கள் அனைவரின் மைக்குகளை ஆப் செய்யும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா உள்ளிட்ட உறுப்பினர்கள் அனைவரின் மைக்குகளும் ஆப் செய்யப்பட்டது.