Categories
மாநில செய்திகள்

சட்டசபை: அமைச்சர் அன்பரசன் வெளியிட்ட அறிவிப்புகள் என்னென்ன?… இதோ முழு விபரம்…..!!!!

சட்டசபையில் அமைச்சர் அன்பரசன் வெளியிட்ட அறிவிப்புகள்:

# மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகிய பகுதிகளில் வீடுகட்டும் திட்டத்தின் கீழ் ரூ 2.10 லட்சம் மானியத்தில் ஒரு லட்சம் தனி வீடுகள் கட்டப்படும்.

# நகர்ப்புறங்களில் வாழும் பொருளாதாரத்தில் பின் தங்கிய ஏழை குடும்பங்களுக்காக நடப்பு ஆண்டில் 25 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்கப்படும்.

# மக்கள் வாழ தகுதியற்ற 7,500 அடுக்குமாடி குடியிருப்புகள், 1,200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மறு கட்டுமானம் செய்யப்படும்.

# “நம் குடியிருப்பு,நம் பொறுப்பு” திட்டத்தினை திறம்பட செயல்படுத்துவதற்கு குடியிருப்போர் நல சங்கங்களுக்கு பதிவு கட்டணத்துக்கு விலக்குஅளிக்கப்படும்.

# அடுக்கு மாடி குடியிருப்புகளை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்க தனி பராமரிப்பு பிரிவு ஏற்படுத்தப்படும்.

# சென்னை உள்ளிட்ட நகரங்களில் கட்டிமுடிக்கப்பட்டு 15 வருடங்கள் கடந்த, 40 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகள் 100 கோடி ரூபாயில் புனரமைக்கப்படும்.

# குடியிருப்புதாரர்கள் வாரியத்திற்கு செலுத்தவேண்டிய மாதாந்திர தவணை தொகையை இணையதள செயலி மூலம் சுலபமாக செலுத்த வழிவகை செய்யப்படும்.

# பயனர்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு பல தரைப்பளவுகொண்ட அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டப்படும் என்று அமைச்சர் அறிவித்தார்.

Categories

Tech |