Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

சட்டசபை கூட்டணி முடிவு?… முதல்வர் பழனிசாமி புதிய அறிவிப்பு…!!!

சட்டசபை தேர்தலிலும் அதிமுக-பாஜக கூட்டணி தொடரும் என அதிமுக கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா, 2 நாள் பயணமாக இன்று சென்னை வந்தடைந்தார். தொடர்ந்து பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைப்பதற்காக கலைவாணர் அரங்கத்துக்கு மாலை வந்தடைந்தார். இந்த விழாவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்குகினார். இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ” நாடாளுமன்ற தேர்தலில் அமைக்கப்பட்ட கூட்டணி தொடரும்” என அறிவித்தார்.

ஏற்கெனவே, “பாஜகவுடனான வெற்றி கூட்டணி சட்டசபை தேர்தலும் தொடரும்” என துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் அமைக்கப்பட்ட கூட்டணியே அப்படியே தொடரும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி செய்துள்ளார். இதனால் பாஜக உள்ளிட்ட பிற கூட்டணி கட்சிகளும் கூட்டணியில் தொடரும் என தெரிகிறது.

Categories

Tech |