Categories
மாநில செய்திகள்

“சட்டசபை கூட்டத்தொடர்”… என்னென்ன அறிவிப்புகள் வெளியாகும்?…. பெரும் எதிர்பார்ப்பு….!!!!

கொரோனா தொற்று காரணமாக கலைவாணர் அரங்கில் கூட்டத்தொடர் நடைபெற்ற நிலையில் இந்த முறை மீண்டும் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் நடத்துவதற்கான பணிகள் நடைபெற்றன. ஆனால் மீண்டும் கொரோனா பரவும் நிலையில் கலைவாணர் அரங்கிலேயே இந்த கூட்டத்தொடரும் நடைபெறும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் இன்று காலை 10:00 மணிக்கு கூட்டத்தொடர் தொடங்கியது. தமிழக ஆளுநராக பதவியேற்ற பின் ஆர்.என்.ரவி முதன்முறையாக உரையாற்ற இருக்கிறார். ஆளுநர் உரையில் புதிய அறிவிப்புகள் இடம்பெறலாம் என்ற எதிர்பார்ப்பு அனைத்து தரப்பினரிடமும் இருக்கிறது.

ஆகவே ஆளுநர் உரையாற்றியதை தொடர்ந்து அவரது ஆங்கில உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசிப்பார். அத்துடன் இன்றைய கூட்டமானது நிறைவடையும். இதையடுத்து சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக் கூட்டம் கூடி, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடத்த எத்தனை நாட்களுக்கு கூட்டத்தொடரை நடத்துவது என்று முடிவு செய்யப்படும். கொரோனா தொற்று காரணமாக குறைந்த தினங்களே கூட்டம் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள், பத்திரிகையாளர்கள், காவல்துறையினர் என, அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. பெரம்பலுார் தி.மு.க எம்.எல்.ஏ பிரபாகரன், அறந்தாங்கி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ராமச்சந்திரன் போன்றோருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியானது. அதைத்தொடர்ந்து அவர்கள் சட்டசபை கூட்டத்திற்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிக்கவர்களுக்கு தனித்தனி அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

எனவே அவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தேர்தல் வாக்குறுதிகள் பலவற்றை நிறைவேற்றவில்லை என்று அதிமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில் கூட்டத் தொடரிலும் அது தொடர்பான விவாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோன்று நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ள நிலையில் மக்களை கவரும் அடிப்படையில் முக்கியமான அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Categories

Tech |