Categories
மாநில செய்திகள்

சட்டசபை: தி.மு.க ஆன்மிக அரசாக விளங்குகிறது…. அமைச்சர் சேகர்பாபு…..!!!!!

தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது ஆலங்குளம் தொகுதி எம்எல்ஏ மனோஜ்பாண்டியன், கீழக்கடையம் பத்ரகாளி அம்மன் கோயிலில் அன்னதான கூடம் அமைக்கப்படுமா..? சென்ற ஜெயலலிதா அம்மா ஆட்சியின்போது கொண்டுவரப்பட்ட அன்னதான திட்டத்தில் தரமான உணவு வழங்கப்படுமா என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து இந்து சமய அறநிலையதுறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு பேசியதாவது “கீழக்கடையம் பத்ரகாளியம்மன் கோயிலில் இந்த வருட அன்னதான கூடம் அமைக்கப்படும். இந்த கோயிலில் 2008ஆம் வருடத்துக்கு பின் கும்பாபிஷேகம் நடைபெறாமல் இருக்கிறது. இந்த வருடம் கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அன்னதான திட்டத்தை பொறுத்தவரையிலும் அதனை யார் கொண்டு வந்தார்கள் என்பதைவிட அதனை யார் சிறப்பாக செயல்படுத்துகிறார்கள் என்பதுதான் முக்கியம் ஆகும். அன்னதான திட்டத்தினை தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. அத்துடன் தரமான உணவுகள் வழங்கப்படுகிறது. அன்னதான திட்டத்தின் கீழ் தமிழ்நாடு கோயில்களில் சுமார் 75 ஆயிரம் பக்தர்கள் உணவு சாப்பிடுகிறார்கள். இதனிடையில் 341 கோயில்கள் உணவுதர சான்றிதழ் பெற்று இருக்கிறது. அந்த அளவிற்கு சிறப்பாக அன்னதான திட்டம் செயல்பட்டு வருகிறது. இதன் வாயிலாக பக்தி பசியையும், வயிற்று பசியையும் போக்கும் முதல்வராக ஸ்டாலின் விளங்கி வருகிறார். தி.மு.க அரசு சிறந்த ஆன்மிக அரசாக விளங்குகிறது. தமிழ்நாட்டில் 666 கோயல்களில் ரூ.844 கோடி செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அவர் பேசினார்.

Categories

Tech |