பிரதமர் நரேந்திர மோடி சட்டசபை தேர்தல் தொடர்பாக நாளை பாஜகவின் மாநில நிர்வாகிகள், எம் எல் ஏ க்கள், எம்பிக்கள் சந்திக்க உள்ளார்.
குஜராத்தில் சட்டசபை தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள நிலையில் நேற்று மாநில மாநில பா.ஜ., தலைவர் சி.ஆர்.பாட்டீல் கூறியதாவது. “பிரதமர் நரேந்திர மோடி நாளை இரண்டு நாள் பயணமாக குஜராத்துக்கு வருகிறார். இதனை தொடர்ந்து அவரை வரவேற்க ஆமதாபாத் விமான நிலையத்தில் இருந்து வழி எங்கும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
இந்நிலையில் அவர் நாளை மாநில நிர்வாகிகள், எம் எல் ஏ க்கள், எம்பிக்கள் ஆகியோர்களை பாஜக அலுவலகத்தில் சந்தித்து பேச உள்ளார். இதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் உள்ள உள்ளாட்சி பிரதிநிதிகளை ஆமதாபாத்தில் மாலையில் நடக்க விருக்கும் மகா பஞ்சாயத்து மாநாட்டில் பங்கேற்று சந்திக்கிறார்.
இதற்கிடையில் பிரதமர் நரேந்திர மோடி 12ஆம் தேதி சிறப்பு விருந்தினராக காந்திநகரில் உள்ள ராஷ்ட்ரீய ரக் ஷா பல்கலைக் கழகத்தின் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க உள்ளார். இதனைத் தொடர்ந்து ஆமதாபாத்தில் ‘கேள் மஹாகும்ப்’ எனப்படும் மாபெரும் விளையாட்டு விழாவை தொடங்கி வைக்கிறார். இந்த நிலையில் மாநிலம் முழுவதும் 500 இடங்களில் நடைபெறும் இந்த விளையாட்டு விழாவில் 47 லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்க உள்ளனர்” என்று கூறியுள்ளார்.